மதுரை ரயில்வே காவல் துறையால் புனையப்பட்ட பொய்வழக்கை நீதிமன்றம் உடைத்தெறிந்தது…

மணப்பாறை மக்கள் அதிகார நிர்வாகிகள் மதுரை செல்லும் தொடர்வண்டியில் பொது கூட்டம் பிரசும் கொடுத்து பிரச்சாரம் செய்த போது மத வெறி கும்பல்கள் வாக்குவாதம் செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து அவர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து மணப்பாறை மக்கள் அதிகாரம் நிர்வாகிகள்  V. சிவகுமார், K.முரளி என்பவர்கள் மீது மதுரை ரயில்வே போலீஸ்  வழக்கு தொடுத்து,  22/06/2018 அன்று அதிகாலையில் 4.00  மணி அளவில் அத்துமீறி வீடு புகுந்து கைது செய்து அழைத்துச் சென்றனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட V..சிவகுமாரை மதுரை இரயில்வே காவல்துறைனர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். உடனடியாக  வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு போலீசாரால் புனையப்பட்ட பொய் வழக்கு என்று அடிப்படையில்  விடுதலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக மக்கள் அதிகாரம் மணப்பாறை நிர்வாகி கூறுகையில், தற்போது தமிழகத்தை ஆண்டு வரும் அரசும், மத்தியில் ஆளும் அரசும் மத வெறி போக்கையும், மக்கள் விரோத போக்கையும், ஜனநாயக குரலை நெரிக்கும் விதமாக செயல்பட்டு வருகிறார்கள்.  ஜனநாயகத்தை மீட்க இறுதி வரை போராடுவோம் என்றார்.
மக்கள் அதிகாரம் மணப்பாறை நிர்வாகியின் தொடர்புக்கு : 9843130911

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!