திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் முகாம் -வீடியோ செய்தி..

ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் ஜீவா தலைமையில் மாற்றுத்திறனாளிகள் முகாம் நடைபெற்றது. முகாமில் ஆத்தூர் வட்டாட்சியர் இராஜகோபால் முன்னிலை வகித்தார். மற்றும் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் நிஸா, மகளிர் ஊர் நல அலுவலர்கள் கஸ்தூரி, நாகலட்சுமி, வேலாத்தாள், தனிவட்டாட்சியர்கள் மீனாதேவி, பொன்சரவணன், ராதாகிருஷ்ணன், மருத்துவர்கள் முகமது ரியாஜ், முனிசாமி,மீன் வெஸ்லி கனரா வங்கி மேலாளர் சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்ட முகாமில் மாற்றுத்திறனாளிகள் ஏறாளமானோர் மனுக்கள் கொடுத்து பயனடைந்தனர்.

இம்முகாம் சம்மந்தமாக மாற்றுத் திறனாளிகளிடம் கேட்டபோது, “இந்த முகாம் எங்களை போன்ற ஊனமுற்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது அரசு இதுபோன்ற முகாம்களை தொடர்ச்சியாக நடத்தும் பட்சத்தில் அலையமுடியாத நாங்கள் சம்பந்தப்பட்ட அணைத்து துறை அதிகாரிகளையும் ஓரிடத்தில் சத்தித்து எங்கள் குறைகளை எடுத்துரைத்து பயன் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று கூறினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!