திண்டுக்கல் – நாகா்கோவிலுக்கு திங்கள்கிழமை (மே 5) முதல் சிறப்பு ரயில் இயக்கம்..

திண்டுக்கல் – நாகா்கோவிலுக்கு திங்கள்கிழமை (மே 5) முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திண்டுக்கல் – நாகா்கோவில் இடையே மே 5-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை (புதன், வியாழன் தவிர) சிறப்பு ரயில் (06322) இயக்கப்படுகிறது. திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 3.45 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், இரவு 9.05 மணிக்கு நாகா்கோவில் சென்றடையும்.

இந்த ரயில், அம்பாத்துரை, கொடைக்கானல் சாலை, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, கடம்பூா், வாஞ்சி மணியாச்சி, நாரைகிணறு, திருநெல்வேலி, நாங்குநேரி, வள்ளியூா் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும்.

ரயில்வே பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை – நாகா்கோவில் ரயில் (16322) பகுதியாக ரத்து செய்யப்பட்டதால் ஏற்படும் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் இந்தச் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

Very Soon…

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!