நான் வெற்றி பெற்றால் சட்ட பூர்வமான நடவடிக்கை மேற்கொண்டு சிறு குறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பேன்! பழனியில் முகமது முபாரக் பேச்சு..
திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பழனி சட்டமன்ற தொகுதியில் இன்று அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . இதில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன் ,திண்டுக்கல் சீனிவாசன் , அதிமுக கூட்டணி எஸ்டிபிஐ மாநில தலைவர் முகமது முபாரக் கலந்து கொண்டனர். முன்னதாக அதிமுக தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் :- எங்கு சென்றாலும் ஸ்டாலினும் அவரது மகன் உதயநிதியும் பொய்யையே மூலதனமாக வைத்துக் கொண்டு பேசி வருகிறார்கள் என்றும் திராவிட மாடல் ஆட்சி என்று கூறி திராவிட கட்சிகளின் சித்தாந்தத்தை கேவலப்படுத்தி வருகிறார்கள் நத்தம் விஸ்வநாதன் பேசினார்.
அதனை தொடர்ந்து பேசிய திண்டுக்கல் சீனிவாசன் பிரதமர் மோடி தேர்தல் நிதி என்று 6500 கோடி ரூபாய் மறைமுகமாக பெற்றுள்ளதாக திண்டுக்கல் சீனிவாசன் குற்றம் சாட்டினார்.
இதனை தொடர்ந்து எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் பேச வந்த போது எம்ஜிஆரின் பாடலான ஆயிரம் கைகள் மறைந்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்ற பாடலை பாடினார். தொடர்ந்து பேசிய முபாரக் பழனி அடிவாரம் முருகன் கோவில் கிரிவலப் பாதைகளில் நீதிமன்ற உத்தரவு என்ற பெயரில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகள் சிறு குறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து இருப்பதாகவும் இதனை நான் வெற்றி பெற்றால் சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வியாபாரிகளுக்கான உரிமைகளை மீட்டெடுப்பேன் எனவும் பேசினார். பின்னர் சின்ன பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை மேற்கொண்ட முபாரக் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன் திண்டுக்கல் சீனிவாசன் உடன் இணைந்து தொழுகை மேற்கொண்டு வந்த இஸ்லாமியரிடம் இரட்டை இலைக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் எம்பி குமாரசாமி ,முன்னாள் எம்எல்ஏக்கள் வேணுகோபாலு ,குப்புசாமி , நகரச் செயலாளர் முருகானந்தம் ,எம் ஜி ஆர் மன்ற மாநில இணை செயலாளர் ரவி மனோகரன்,ஒன்றிய செயலாளர்கள் நிர்வாகிகள் என ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









