பழநியில் இந்து முன்னணி நிர்வாகி நான்கு பிரிவின் கீழ் கைது..

பழனியில் இந்து முன்னணி நிர்வாகி கைது- மதரீதியான மோதல்களை உருவாக்கும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டதால் வழக்கு பாய்ந்தது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பாப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன். இந்து முன்னணியில் மாநில நிர்வாக குழு உறுப்பினரும், இந்து வியாபாரிகள் நலச்சங்க மாநில செயலாளராக உள்ளவர் ஜெகன். சென்னையில் உள்ள இஸ்லாமியர்க்கு சொந்தமான உணவகத்தில் தரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவதாகவும், குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவர் என்பதால் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் கண்டுகொள்ளாமல் சாதகமாக செயல்படுவதாக அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோவை ஜெகன் பதிவிட்டார். இந்தநிலையில் சர்ச்சையை ஏற்படுத்தி இரு மதங்களுக்கு இடையே பிரச்சனையை உண்டு பண்ணும் வகையில் வீடியோ உள்ளதாக புகார் எழுந்தது. இது மத மோதலை உருவாக்குதல், பொது அமைதியை சீர்குலைத்தல், வதந்தி பரப்புதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் பழனி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகனை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி பழனி கிளை சிறையில் அடைத்தனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!