வேடசந்தூர் அருகே பெண்ணிடம் அரிவாள் கத்தியை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி செயின், தோடு பறிப்பு.
திண்டுக்கல் வேடசந்தூர் அருகே நாகம்பட்டியில் தோட்டத்து வீட்டில் குடியிருக்கும் பாண்டியம்மாள்(43) இவரின் கணவர் ஆண்டிவேல் வேலை காரணமாக கோயம்புத்தூர் சென்றிருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த நிலையில் 30 வயது மதிக்கத்தக்க 3 வாலிபர்கள் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்து பாண்டியம்மாவின் கழுத்தில் அரிவாளை வைத்து கழுத்தில் அணிந்திருந்த 1 1/2 பவுன் செயின், காதில் அணிந்திருந்த 1/2 பவுன் தோடு ஆகியவற்றை பறித்து சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் வேலாயுதம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடைபெற்றது.
You must be logged in to post a comment.