பட்டிவீரன்பட்டியில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 17 ஆண்டுகள் சிறை, ரூ.25 ஆயிரம் அபராதம்.
திண்டுக்கல், பட்டிவீரன்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த சிறுமியை கடந்த 2024-ம் ஆண்டு காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த சிங்காரகோட்டை, காந்திபுரம் பகுதியை சேர்ந்த பிரேம்குமார்(25) என்பவரை பட்டிவீரன்பட்டி போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று நீதிபதி அவர்கள், பிரேம்குமாருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
You must be logged in to post a comment.