திண்டுக்கல் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை வெட்டி படுகொலை செய்த வழக்கில் 6 வாலிபர்கள் கைது..

திண்டுக்கல் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை வெட்டி படுகொலை செய்த வழக்கில் 6 வாலிபர்கள் கைது..

திண்டுக்கல் அருகே யாகப்பன்பட்டி டாஸ்மாக் கடை அருகே திண்டுக்கல் வேடப்பட்டி பகுதியை சேர்ந்த மாயாண்டி ஜோசப்(60) என்பவரை நேற்று இரவு மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்தது தொடர்பாக தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்து மாவட்ட எஸ்பி பிரதீப் உத்தரவின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையில் சார்புஆய்வாளர்கள் பிரபாகரன், பாலசுப்ரமணியன் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படையினர் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட யாகப்பன்பட்டி பகுதியை சேர்ந்த ஆரோக்கியம் மகன் டேனியல் ராஜா(20), ஞானபிரகாசம் மகன் அலெக்ஸ் பிரிட்டோ(20), பார்வையற்றோர் காலனி பகுதியை சேர்ந்த செல்லப்பாண்டி மகன் தமிழ்செல்வன்(18), நாராயணன் மகன் சிரஞ்சீவி(18), செல்வராஜ் மகன் காளீஸ்வரன்(20), மணிகண்டன் மகன் பிரவீன் குமார்(19) ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!