திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியை சேர்ந்த மக்கள் எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்,
திண்டுக்கல்- மதுரை ரோடு அவர் லேடி ஸ்கூல் அருகே அமைந்துள்ள நன்னப்பா நகரில் சுமார் 400 குடும்பங்கள் பல வருடங்களாக வசித்து வருகின்றனர், இந்த நன்னப்பா நகரில் அனைத்து சமுதாய மக்களும் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை தேவையான ரோடு, சாக்கடை, தெரு விளக்குகள், குடிநீர், போன்ற எந்த ஒரு தேவையும் அறவே கிடையாது என்று இப்பகுதி பொது மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் இப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் கூறும்போது! வீட்டு வரி, தண்ணீர் வரி, மின்சார கட்டணம், போன்ற அனைத்தையும் முறையாக அரசாங்கம் வசூலித்து வருகிறது, இருந்தாலும் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தர வில்லை, இரவு நேரங்களில் இந்த பகுதியில் இருட்டாக இருப்பதால் பல்வேறு சமூக விரோத செயல்களும் நடைபெற்று வருகிறது.
மாநகராட்சி என்று திண்டுக்கல் தரம் உயர்த்தப்பட்டாலும் நாம என்னவோ தனி தீவில் வாழ்வது போல தான் உள்ளது நிலைமை, உடனடியாக இந்த அவலங்களை போக்கி அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் இல்லை என்றால் இப்பகுதியில் வசிக்கும் பொது மக்களாகிய நாம் ஒன்று கூடி மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருக்கிறோம் என்றும் தெரிவித்து கொள்கிறோம், என்று மிகவும் ஆதங்கத்துடன் மக்கள் தெரிவித்துள்ளனர்.
செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












