திண்டுக்கல் மாவட்டத்திற்கு புதிய 8 அறிவிப்புகள் அறிவிப்பு..

திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகள் ரூ.14.20 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

பழைய பாதாள சாக்கடை, சுத்திகரிப்பு நிலையம் ரூ.8 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.

பழனி தண்டாயுதபாணி கோவிலில் புனித திருத்தலங்களான இடும்பன்குளம், சண்முகாநதி ரூ.6 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள நத்தம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.18.50 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்படும்.

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மார்க்கம்பட்டியில் முருங்கை ஏற்றுமதிக்கான பதப்படுத்தும் தொழிற்சாலை ரூ.7 கோடி செலவில் அமைக்கப்படும்.

கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சியில் 100 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா முதலீட்டு பூங்கா அமைக்கப்படும்.

கண்வழிக்கிழங்கு பயிருக்கு நிலையான நியாயமான விலை கிடைக்க மத்திய அரசிடம் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் அதிகமாக மக்கள் இருக்கும் பகுதியில் ரூ.17 கோடி செலவில் புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படும்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!