பழனி அருகே கீரனூரில் பல்வேறு தடைகளை உடைத்து கொடியேற்றியும் , இனிப்புகள் வழங்கியும் ,பொதுகூட்டம் நடத்தி மாஸ் காட்டிய தமிழக வெற்றி கழகத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கீரனூரில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தொகுதியில்,தவெக பொதுக்கூட்டம் மற்றும் கொடியேற்றும் நிகழ்விற்கு கடந்த இரண்டு மாதங்களாக காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டு அலைக்கழிப்பு செய்த வந்து நிலையில் கீரனூர் பேரூர் பொறுப்பாளர் முகமது அலி ஜின்னா ஏற்பாட்டில் அவரது சொந்த இடத்தில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் தர்மா தலைமையில் கொடியேற்றும் நிகழ்ச்சியும் , இனிப்புகள் வழங்கியும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம் நகர தலைவர் குரு அருண் ,ஒன்றிய தலைவர் முகமது நூர் ,பேரூர் கழக தலைவர் சின்னவர் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.