பனிரெண்டாம் வகுப்பு தேர்வில், திண்டுக்கல் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த பட்டிவீரன்பட்டி விவசாயி மகள். பொறியாளராக ஆவேன் என, பேட்டி…
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி., மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் பட்டிவீரன்பட்டி ஹைஸ் ஸ்கூல் ரோட்டைச் சேர்ந்த விவசாயி, மகேஸ்வரன் (44) பிரீத்தா (42) தம்பதியரின் மகள் தன்யஸ்ரீ என்பவர் இப்பள்ளியில் எல்.கே.ஜி., முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து வருகிறார்.
இந்நிலையில், இன்று திங்கள்கிழமை வெளியான பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவில், திண்டுக்கல் மாவட்ட அளவில், 594 மதிப்பெண்கள் பெற்று, பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி., பள்ளியில் படித்த மாணவி தன்யஸ்ரீ முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்த மாணவி தமிழ் 98, ஆங்கிலம் 96, கணக்கு, 100, இயற்பியல் 100, வேதியல் 100, கணினி அறிவியல் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவி தன்யஸ்ரீ-க்கு பள்ளி தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவியை பாராட்டி மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவிக்கு, பெற்றோர்கள் இனிப்பு வழங்கி பாராட்டினர்.
இதுகுறித்து மாணவி தன்யஸ்ரீ கூறுகையில், நான் எல்கேஜி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை இந்த பள்ளியில் தான் படித்தேன். எனக்கு பள்ளி முதல்வர், வகுப்பு ஆசிரியர்கள் நன்றாக படிப்பதற்கு ஊக்கப்படுத்தினர். அவர்களால் தான் நான் மாவட்ட அளவில் முதலிடம் பெற முடிந்தது. அதேபோல் எனது பெற்றோர்களும் என்னை ஊக்கப்படுத்தி படிக்க வைத்தனர். நான் எதிர்காலத்தில் இன்ஜினியர் ஆவது எனது லட்சியம். இனி வருங்காலத்தில் என்னைப் போல் மற்ற மாணவ மாணவிகளும் படிக்க வேண்டும் என, கூறினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









