பழநியில் அரசு உதவித்தொகை வழங்க மறுக்கும் வங்கியில் மாற்றுத்திறனாளி பெண்ணை ஒப்படைக்கும் போராட்டம்..

பழநியில் அரசு உதவித்தொகை வழங்க மறுக்கும் வங்கியில் மாற்றுத்திறனாளி பெண்ணை ஒப்படைக்கும் போராட்டம்..

திண்டுக்கல் மாவட்டம் பழைய ஆயக்குடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் ,மனைவி புஷ்பா இவர்களுடைய மகள் ராமலட்சுமி (25) இவர் கடுமையான மன வளர்ச்சி குன்றிய நிலையில் இருந்து வருகிறார். இவருக்கு தமிழக அரசின் சார்பில் மாற்றத்திறனாளிகள் திட்டத்தின் சார்பில் மாதம் 2000 ரூபாய் வங்கி மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ராமலட்சுமி என்ற மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிக்கு ஆயக்குடி கிளையில் ஆதார் எண் இல்லை என்பதால் கடந்த ஆறு மாத காலமாக தமிழக அரசு உதவித்தொகை அரசு வழங்கியும், சம்பந்தப்பட்ட வங்கி பணத்தை வழங்காமல் நிறுத்தம் செய்திருக்கிறது.  இதனை கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் ஆயக்குடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மாற்றுத்திறனாளி பெண்ணை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தினர். முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆதார் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் சமூக நல திட்டங்களுக்கு ஆதார் எண்ணை கட்டாயபடுத்தகூடாது என்று உத்தரவிட்டுள்ளதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட செயலாளர் பகத்சிங் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இதனையடுத்து போலிசார் மற்றும் வங்கி மேலாளர் நடத்திய பேச்சுவார்த்தையில் ரிசர்வ் வங்கியால் விதிகளின் படி தான் பணம் வழங்கபட்டு வருவதாக தெரிவித்தனர் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!