கத்தியை காட்டி பணம் பறித்த கும்பலை மடக்கி பிடித்த பழனி நகர காவல்துறையினர்..
பழனியில் உள்ள பிரபல தனியார் தங்கும் விடுதியில் கத்தியை காட்டி பணம் மற்றும் கைபேசியை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.
தப்பி சென்ற நபர்களை பற்றி பாதிக்கப்பட்ட நபர் நகர காவல்நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து நகர காவல் துணை கண்காணிப்பாளர் தனஜெயன் உத்தரவின் பேரில் நகர காவல் ஆய்வாளர் மணிமாறன் அறிவுரையின்படி சார்பு ஆய்வாளர் விஜய் தலைமையிலான போலீசார் சண்முகநதி பைபாஸ் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது சந்தேகப்படும்படியாக வந்த 2 கார்களையும் நிறுத்தி சோதனை செய்ததில் வாகனத்தில் இருந்து கத்தி பணம் போன்ற பொருள்களை கிடைத்ததை தொடர்ந்து அதில் இருந்த 5 நபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த நபர்களிடம் இருந்து 2 கைபேசி மகேந்திரா xuv கார் மற்றும் கத்தியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
You must be logged in to post a comment.