இடிந்து விழுந்த கழிவறை, பழநியில் சமூக ஆர்வலர்கள் பலர் எழுப்பும் கேள்விகள்.? விடை சொல்லுமா நிர்வாகம்.?

பழனி பேருந்து நிலையம் அருகே பழனி நகராட்சிக்கு சொந்தமான தங்கும் விடுதி உள்ளது. பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக வாடகைக்கு விடப்படும் இந்த விடுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை நகராட்சி தங்கும் விடுதியில் உள்ள ஒரு அறையின் கழிவறை பகுதி இடிந்து விழுந்தது. இருப்பினும் யாருக்கும் எவ்வித பாதிப்பும், சேதமும் ஏற்படவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் நகராட்சி விடுதியின் கட்டிடப் பராமரிப்பு பணி நடைபெற்றது. தரமற்ற பணி காரணமாகவே கட்டிடம் இடிந்து விழுந்ததாகவும், மேலும் இதுபோல சம்பவங்கள் நடைபெற்றால் பொதுமக்களின் நிலை என்னவாகும் என்று கேள்வி எழுந்துள்ளது. நகராட்சி விடுதி கட்டிடத்தின் பராமரிப்பு பணி முறையாக நடந்துள்ளதா என்று ஆய்வு செய்து, மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழநி- ரியாஸ்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!