திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பழைய ஆயக்குடியை சேர்ந்தவர் ராம்குமார் இவரது மனைவி மீனா கடந்த சில வருடங்களாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மீனாவின் தாய் மாமாவான ஜெகதீஸ்வரன் வீட்டில் வசித்து வருவதால் மீண்டும் குடும்பம் நடத்த முடியவில்லை எண்ணிய ராம்குமார். இன்று காலை விவசாய தோட்டத்திற்கு சென்று கொண்டு திரும்பிக் கொண்டிருந்த ஜெகதீஸ்வரனை வழிமறித்த ராம்குமார் மற்றும் அவரது நண்பருடன் சேர்ந்து அரிவாளில் சரமாரியாக 10க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டியதில் நிலை குலைந்து சரிந்து விழுந்தார்.
இதனை கண்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெகதீஸ்வரனை பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதில் அவருக்கு உடலில் முன்னேற்றம் இல்லாத்தால் , மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மீனாவின் கணவர் ராம்குமார் அவருடைய நண்பர் உள்ளிட்ட தப்பிய ஓடிய நிலையில் ஆயக்குடி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பழனியில் கணவன் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த நிலையில் இடையூறாக இருந்த தாய் மாமனை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









