திமுக அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை, நடிகை குஷ்பு அவதூறாக பேசியதை கண்டித்து பழனியில் திமுகவினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது குஷ்புவின் உருவப்படத்தை செருப்பால் அடித்தும், தீயிட்டு கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திமுக அரசின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை, கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை குஷ்பு அவதூறாக பேசியதாகக்கூறி, குஷ்புவை கண்டித்து பழனியில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பழனி பேருந்துநிலையம் அருகே, திமுக நகரச் செயலாளர் வேலுமணி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நடிகை குஷ்புவை கண்டித்து கோஷமிட்டனர். தொடர்ந்து குஷ்புவின் உருவப்படத்தை செருப்பால் அடித்தும் தீயிட்டு கொளுத்தியும் கண்டன கோஷமிட்டனர். இந்தப் போராட்டத்தில் பழனி நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி நகர்மன்ற உறுப்பினர்கள் மகளிர் அணியினர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பழநி- ரியாஸ்
You must be logged in to post a comment.