பழனியில் அடிவாரம் பகுதி மக்கள், வியாபாரிகள் வாழ்வாதாரத்தை திமுக அரசு காக்கத் தவறியதாக பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
உயர்நீதி மன்ற உத்திரவு என்ற பெயரில் பழனி அடிவாரம் பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை திமுக அரசு காக்கத்தவறி விட்டதாகவும், இந்து இயக்க பொறுப்பாளர்கள் மீது பொய்வழக்கு போடப்படுவதாகவும் தெரிவித்து இன்று பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பழனி அடிவாரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகுறு வர்த்தகர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும், திருக்கோயில் தவறுகளை கண்டித்து கேட்ட இந்து இயக்க பொறுப்பாளர்கள் மீது பொய்வழக்கு போடப்படுவதாகவும் தெரிவித்த மாவட்ட தலைவர் கனகராஜ் திருக்கோயில் செயல்பாடுகள் குறித்து விரைவில் மதுரைக் கிளை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளதாகவும் தெரிவித்தார் . மேலும், திமுகவை சேர்ந்த பழனி சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர், கவுன்சிலர்கள் என யாருமே இதுகுறித்து பேசுவதில்லை என்றும் தெரிவி்த்தார். ஆர்ப்பாட்டத்தில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் திருமலைச்சாமி , மாவட்ட தலைவர் கனகராஜ், மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன், நகர தலைவர் ராமசந்திரன் ,மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில் ,மாவட்ட பொருளாளர் ஆனந்த் , உள்ளிட்ட பலர் கண்டன உரை நிகழ்த்தினர் . ஆண்கள், பெண்கள், நிர்வாகிகள் என சுமார் ஐநூறு பேர் கலந்து கொண்டனர்.
பழநி- ரியாஸ்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









