பழனி கோயில் இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றம்!- தேவஸ்தானத்திற்கு சொந்தமான கடைகளை சீல் வைத்து கோயில் நிர்வாகம் நடவடிக்கை..
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான கடைகள் மலையடிவாரம், பேருந்து நிலையம் அருகில் மற்றும் ரயில் நிலைய சாலையில் உள்ளன. இந்த கடைகள் பல்வேறு நபர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. தற்போது தேவஸ்தானத்திற்கு கடைகள் உள்ள இடம் தேவைப்படுவதால் காலி செய்யக்கோரி வாடகைதாரருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. காலி செய்ய மறுத்து கடைக்காரர்கள் நீதிமன்றம் சென்ற நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் கோயில் நிர்வாகம் கடைகளை பூட்டி சீல் இன்று வைத்தது. மேலும் பேருந்து நிலையம் அருகே இருந்த கோயிலுக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டன. கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
You must be logged in to post a comment.