பழனியில் மாங்காய் விளைச்சல் கடுமையாக பாதிப்பு! வெயிலின் தாக்கத்தால் மரத்திலேயே காய்ந்து உதிர்வதால் விவசாயிகள் கவலை..
திண்டுக்கல் மாவட்டம்
பழனி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான ஆயக்குடி, கோம்பைபட்டி, கணக்கண்பட்டி, பாலசமுத்திரம் உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாயிகள் மாங்காய் விவசாயத்தில்.ஈடுபட்டு வருகின்றனர. வருடத்திற்க்கு ஒருமுறை பங்குனி, சித்திரை மாதங்களில் மாங்காய் விளைச்சல் கிடைக்கும். இந்த ஆண்டு பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான வெயில் வாட்டிவதைத்து வருகிறது. வெயிலின் தாக்கத்தால் பழனியில் மாங்காய் விளைச்சல் முற்றிலுமாக பாதித்துள்ளது. மாமரங்களில் பூ பூத்து பிஞ்சுகள் உருவாகும் நேரத்தில் கடுமையான வெயிலின் தாக்கம் இருந்ததால் மரத்தில் இருந்த மாபிஞ்சுகள் உதிர்ந்து வருகிறது. அதிக வெப்பத்தால் பூக்கள் கருகி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
பழநி- ரியாஸ்
You must be logged in to post a comment.