பழனி அருகே கேரளாவுக்கு லாரியில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேர் கைது, 2300 கிலோ ரேஷன் அரிசி, லாரி ஆகியவை பறிமுதல்..
திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை DSP. செந்தில் இளந்திரையனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆய்வாளர் சுகுணா தலைமையில் சார்பு ஆய்வாளர் ராதா ,காவலர்கள் காளிமுத்து, கணேசன் ஆகியோர் பழனி சத்திரப்பட்டி டோல்கேட் அருகே அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமாக தீவிர வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரேஷன் அரிசி கடத்திய மதுரை ஐயர்பங்களா பகுதியை சேர்ந்த கணேஷ்குமார்(53) மதுரை மேலக்கால் பகுதியை சேர்ந்த மகேந்திரன்(31) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 2300 கிலோ ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தி லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்து இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
You must be logged in to post a comment.