பழனி அடிவாரம் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை நீதிமன்ற உத்தரவுப்படி நகராட்சி அதிகாரிகள் அகற்றம்..

பழனி அடிவாரம் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை நீதிமன்ற உத்தரவுப்படி நகராட்சி அதிகாரிகள் அகற்றம்..

அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் கோவிலுக்கு செல்லும்போது ஆக்கிரமிப்பு கடைகளால் பக்தர்கள் பாதிக்கப்படுவதாக கூறி திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இதில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த நிலையில் நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் குழு அமைக்கபட்டது. கிரிவலப்பாதை அடைக்கப்பட்டு கிரிவலப் பாதையில் இருந்து ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டது. அடிவாரம் பகுதிகளில் எந்த ஒரு ஆக்கிரமிப்பு கடைகள் இல்லாதவாறு அகற்றி வருகின்றனர்.இதே போல இன்று அருள்ஜோதி வீதி ,அய்யம்புள்ளி சாலை , தேவர் சிலை ,சரவணப் பொய்கை உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் ஆக்கிரமிப்பு கடைகளை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் மீண்டும் வைக்கப்பட்டால் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு திரும்ப தரப்படாது எனவும் நகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர்.இதில் வட்டாட்சியர் சக்திவேலன் டிஎஸ்பி தனஜெயன் ஆய்வாளர் மணிமாறன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!