பழனி அருகே தனியார் தோட்டத்தில் நரபலியா.? சம்பவ இடத்தில் போலிசார் தீவிர விசாரணை..

பழனி அருகே தனியார் தோட்டத்தில் நரபலியா.? சம்பவ இடத்தில் போலிசார் தீவிர விசாரணை..

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மேல்கரைப்பட்டியில் குமரவேல் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நடுவில் இன்று காலை பூஜை செய்து மர்மமான ஏதோ ஒன்று புதைக்கப்பட்டு உள்ளதாக நிலத்தின் உரிமையாளர் கீரனூர் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

புதைக்கபட்ட இடத்தின் அருகிலேயே தனியார் பள்ளி மாணவியின் சீருடையும் இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேறு ஏதாவது பூஜை செய்து மர்மமாக புதைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய பழனி டிஎஸ்பி தனஜெயன்,பழனி வட்டாட்சியர் சக்திவேலன், நகர,தாலுகா இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

நாளை காலை குறிப்பிட்ட இடத்தில் மருத்துவர்கள் குழுவினர் முன்னிலையில் குழியை தோண்டி ஆய்வு செய்ய உள்ளதாக டி.எஸ்.பி. தனஞ்ஜெயன் தகவல்.

தனியார் தோட்டத்தில் கொலை செய்து உடலை புதைத்துள்ளதாக தகவல் பரவியதையடுத்து ஏராளமான பொதுமக்கள் தனியார் தோட்டத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!