நிலக்கோட்டையில் மூத்த வழக்குரைஞர்களுக்கு பாராட்டு விழா! ஓய்வுபெற்ற புதுச்சேரி தலைமை நீதிபதி பங்கேற்பு..
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் வட்டார வழக்கறிஞர் சங்கம் சார்பாக 30/04/2024 அன்று மாலை மூத்த வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஓய்வுபெற்ற (புதுச்சேரி) தலைமை நீதிபதி டி.கிருஷ்ணராஜா மற்றும் நிலக்கோட்டை அரசு வழக்கறிஞர் கார்த்திகா தர்ஷினி, திமுக ஒன்றியச் செயலாளரும் வழக்கறிஞருமான மணிகண்டன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
முன்னதாக வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு கயிறு இழுக்கும் போட்டி, மியூசிக்கல் சேர், போன்ற பல்வேறு போட்டிகள் நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து போட்டிகளில் ஜெயித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
வருகை தந்த நீதிபதியின் கரங்களால் மூத்த வழக்கறிஞர்களுக்கு மட்டும் அல்லாமல் இளம் வழக்கறிஞர்களுக்கும் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதி வழக்கறிஞர்கள் எப்படி பணியாற்ற வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும், போன்ற விஷயங்களை தெளிவாக எடுத்துக் கூறி பல்வேறு சட்ட ஆலோசனைகளையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை வட்டார வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் இளங்கோவன்,கௌரவத் தலைவர் கருப்பையா, செயலாளர் கோகுல்நாத், பொருளாளர் வேந்தன், துணைச் செயலாளர் ராஜா, துணைத் தலைவர் சங்கர், உதயகுமார் உட்பட நிர்வாகிகள் உறுப்பினர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வைத் தொடர்ந்து வருகை தந்த வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









