திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில், நத்தத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா..

திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில், நத்தத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா..

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் யூனியன் அலுவலகம் எதிரே உள்ள அம்மா திருமண மண்டப வளாகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடந்தது.இதற்கு மாவட்ட சமூக நல அலுவலர் புஷ்பகலா தலைமை தாங்கினார். யூனியன் ஆணையாளர் விஜயசந்திரிகா, முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டி அம்பலம், நத்தம் பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர்பாட்சா, திமுக ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக்குமார், பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ராஜ்மோகன் வரவேற்றார். இதில் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி கலந்து கொண்டு 85 பயனாளிகளுக்கு நிதிஉதவியுடன் தலா 8 கிராம் தங்கம் வழங்கி பேசினார்.விழாவில் வட்டார சமூக நல அலுவலர் தனம், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமாரசாமி, நகர அவைத் தலைவர் சரவணன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி தலைவர் ராஜகோபால்,மாவட்ட பிரதிநிதி குடகிப்பட்டி அழகர்சாமி உள்ளிட்ட சமூகநலம், ஊரக வளர்ச்சி துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!