கடந்தமாதம் மின் கணக்கீட்டு அளவு எடுக்கப்படாததால் மின் கட்டணம் அதிகமாக உள்ளதாக பயனீட்டாளர்கள் மத்தியில் குழப்பம்!

கடந்தமாதம் மின் கணக்கீட்டு அளவு எடுக்கப்படாததால் மின் கட்டணம் அதிகமாக உள்ளதாக பயனீட்டாளர்கள் மத்தியில் குழப்பம்!

கொரோனா பரவலை தடுக்க அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக, அனைத்து மக்களும் வீடுகளில் முடங்கி கிடப்பதாலும், சுட்டெரிக்கும் வெயில் காரணமாகவும் தொலைக்காட்சி, மின்விசிறி உள்ளிட்ட மின்சாதனங்கள் பயன்பாடு அதிகளவில் உள்ளது. இதனால் வழக்கத்திற்கு மாறாக மின் பயன்பாட்டு அளவு அதிகரித்து மின் கட்டணமும் அதிகரிக்கும் வாய்ப்புள்ள நிலையில்,

ஊரடங்கு உத்தரவு காரணமாக பிப்ரவரி-மார்ச் மாத ரீடிங் எடுக்காத மின் இணைப்புகளுக்கு முந்தைய மாத கட்டணத்தை செலுத்த மின்சார வாரியம் அறிவுறுத்தியது. அடுத்த இரண்டு மாத கணக்கீட்டின் போது கூடுதல் குறைவு கட்டணம் சரிசெய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

திண்டுக்கல் மாவட்டம் மின்வாரியம் சார்பாக வத்தக்குண்டு கோட்டம் முழுவதும் பயனீட்டாளர் புரிதலுக்காக யூனிட் அளவிற்கான அட்டவணை பதாகைகள் வைக்கப்பட்டுள்ள போதும் பணம் கட்டவரும் பயனீட்டாளர்கள் மின் ஊழியர்களிடம் மேலும் விளக்கம் கேட்டு கரண்ட் பில் அதிகம் என முனுமுனுத்துக்கொண்டே குழப்பத்துடன் பணத்தை செலுத்தி செல்கின்றனர்.

-திண்டுக்கல், பக்ருதீன்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!