கொரொனா பாதிப்பு நிவாரணம் வழங்கக்கோரி இடசாரி கட்சிகள் ஒட்டன்சத்திரத்தில் ஆர்ப்பாட்டம்!

கொரொனா பாதிப்பு நிவாரணம் வழங்கக்கோரி இடசாரி கட்சிகள் ஒட்டன்சத்திரத்தில் ஆர்ப்பாட்டம்!

கொரோனா நோய்தொற்று பரவலால் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நிலையில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இடதுசாரி கட்சிகள் சார்பாக நடைபெற்றுவரும் ஆர்பாட்டத்தின் ஒரு பகுதியாக 09/06/20 செவ்வாய் கிழமை இன்றுகாலை 10 மனியளவில் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் திண்டுக்கல் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி கலந்து கொண்டார்.

இதில் சிறு, குறு, நடுத்தர தொழில் புரிவோருக்கு ரூபாய் 10 லட்சம் கடன் வழங்கக்கோரியும் இலவச மின்சாரத்தை பறிக்கும் மின்சார சட்டத்தை கைவிடகோரியும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் மத்திய அரசு ரூபாய் 7500-ம் மாநில அரசு ரூபாய் 5000 வழங்கிட வேண்டி கைகளில் பதாகைகள் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கலந்துகொண்ட அனைவரும் முகக்கவசம் அனிந்து சமூக இடைவெளியை பின்பற்றினர்.

-திண்டுக்கல், பக்ருதீன்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!