இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு இடங்களில் வீட்டில் இருந்தபடி போராட்டம்!
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 48 இடங்களில் ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் வீட்டில் இருந்தபடி போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் சுய உதவி குழுக்கள் கடன்களை ரத்து செய்ய வேண்டியும், பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறைகள் தடுத்து நிறுத்த ப்பட வேண்டியும், ரேசன் கடைகள் மூலம் இலவசமாக மளிகை சாமான்கள் வழங்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி, மாவட்டம் முழுவதும் 48 இடங்களில் 475 பெண்கள் பங்கேற்ற வீட்டிலிருந்து போராட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் நகரில் நடைபெற்ற இயக்கத்திற்கு மாவட்ட தலைவர் ஜானகி யும் நத்தத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராணி, ரெட்டியார் சத்திரத்தில் மாவட்ட பொருளாளர் கவிதா சின்னாளபட்டியில் மாநில குழு உறுப்பினர் வனஜாவும் இடைக்கமிட்டி செயலாளர்கள் ராஜேஸ்வரி, சுமதி, பாப்பாத்தி, மணிமேகலை, கௌரி, பொருளாளர் ராக்கம்மாள், மற்றும் கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.


You must be logged in to post a comment.