இலவச மின்சாரத்தை பறிக்கும் மின்சாரசட்டம் 2020-யை வாபஸ் பெற வேண்டி விவசாயிகள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம்!

இலவச மின்சாரத்தை பறிக்கும் மின்சாரசட்டம் 2020-யை வாபஸ் பெற வேண்டி விவசாயிகள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக. விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை பறிக்கும் மின்சாரச் சட்டம் 2020 வாபஸ் பெற வேண்டும். விவசாயிகள் பெற்றுள்ள கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி விவசாயிகளுக்கு ரூபாய் 10000 வழங்கவேண்டும். மத்திய அரசு வழங்கும் விவசாயிகள் உதவி தொகை ரூபாய் 6 ஆயிரத்தை 18 ஆயிரமாக உயர்த்தி வழங்கிட வேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தை விவசாய பணிகளுக்கு பயன்படுத்த உத்தரவிட்டு வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 28 மையங்களில் 27-5-2020 (இன்று) விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதன்படி தொப்பம்பட்டி 7, ஆத்தூர் 6, சாணார்பட்டி 3, பழனி ரெட்டியார்சத்திரம் நிலக்கோட்டை தலா 2, குஜிலியம்பாறை வேடசந்தூர் வடமதுரை வத்தலக்குண்டு நத்தம் தலா 1, திண்டுக்கல் ஒன்றியத்தில் 25 பேர்கள் கலந்து கொண்டதில்16 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தத்தில் 419 பேர் கலந்து கொண்டுள்ளனர் .

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!