செம்பட்டி தேரோடும் வீதியில் முறிந்து விழும் நிலையில் மின்கம்பம் அச்சத்தில் பொதுமக்கள்: கண்டுகொள்ளுமா மின் வாரியம்?
பச்சமலையான் கோட்டை ஊராட்சி செம்பட்டி தேரோடும் வீதி பகுதியில் உள்ள மின் கம்பம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து உடைந்து விழும் நிலையிலும், மக்கள் வசிக்கும் பகுதிகளில் மக்களின் உயிரை பறிக்கும் நிலையிலும், அபாயகரமான நிலையில் உள்ளது. இது குறித்து உதவி பொறியாளர் கவனித்திற்கு கொண்டு சென்றும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மின்கம்பம் முறிந்து விழுந்து உயிர்பலி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சேதம் ஏற்படும் முன் மின்வாரிய அதிகாரிகள் பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி உதவுமாறு அப்பகுதிவாழ் குடியிருப்பு வாசிகள் சார்பாக கோரிக்கை வைத்துள்ளனர்.


You must be logged in to post a comment.