செம்பட்டி அருகே பெண் ஒருவருக்கு கொரொனா நோய்தொற்று அந்த பகுதி தடை செய்யப்பட்டது!
திண்டுக்கல் மாவட்டம் பச்சமலையான் கோட்டை ஊராட்சி புது காம்பட்டியில் பெண் ஒருவருக்கு கொரொனா நோய்தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் புது காம்பட்டி வந்ததுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் செம்பட்டி காவல்துறையினர் சுகாதார துறைக்கு தகவல் அளித்து பரிசோதனைக்காக அவரை மருந்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டதின் பேரில் அப்பகுதியில் மேலும் பரவாமல் தடுக்கும் விதமாக தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு செம்பட்டி காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையில் கொண்ட காவல்துறையினர் புது காம்பட்டிக்கு வரும் வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டு கண்காணிப்பு பனியில் ஈடுபட்டு வருகின்றனர்.


You must be logged in to post a comment.