பனி முடிந்தும் அகற்றப்படாமல் விபத்து ஏற்படுத்தும் நிலையில் மின் கம்பங்கள் உயிர் பலிகள் ஏற்படும் முன் சரி செய்ய பொது மக்கள் கோரிக்கை!
ஆத்தூர் தாலுகா சித்தையன் கோட்டை பகுதிகளில் கடந்த சுமார் எட்டு மாதகாலத்திற்கு முன்பு புதிய மின்கம்பங்கள் ஊன்றப்பட்டு உயர் அழுத்த மின் பராமறிப்பு பனி நடைபெற்றது.
பனிமுடிந்து எட்டு மாதகாலங்கள் ஆனபிறகும் பழைய மின்கம்பங்கள் அகற்றப்படாமல் சாலையை மறித்து நிற்பதால் வாகனஓட்டிகள் அதில் இடித்து உயிர்பலி ஏற்படும் நிலையில் உள்ளது. மேலும், அரசு மருத்துமனை நுழைவாயில் முன்பு மிகவும் தாழ்வாக மின்கம்பி குறுக்கே செல்வதால் மருத்துவமனைக்கு வரும் அவசர ஊர்தி போன்ற வாகனங்கள் மேற்கூறை உராய்வு போன்ற காரணங்களால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே, விபத்தினால் உயிர்பலி ஏற்பதுவதற்க்கு முன்பு துறைசார்ந்த அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு இடையூறாக உள்ள மின்கம்பங்கள் அகற்றுவதோடு மருத்துமனை நுழைவாயிலில் தாழ்வாக தொங்கும் நிலையில் உள்ள மின்கம்பியை சற்று உயர்வாக இழுத்துகட்டி உதவுமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


You must be logged in to post a comment.