வேலையிழந்த தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.7500 நிவாரணம் கேட்டு சிஐடியு ஆர்ப்பாட்டம்!

வேலையிழந்த தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.7500 நிவாரணம் கேட்டு சிஐடியு ஆர்ப்பாட்டம்!

கொரானா வைரஸ் நோய் தொற்றை எதிர்த்து போராடும் மருத்துவர்கள் , செவிலியர்கள் , தூய்மை பணியாளர்கள் , காவலர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் காப்பீடு செய்திட வேண்டும் . 8 மணிநேர வேலையை 12 மணி நேரமாக மாற்றாதே , கொரானாவால் வேலையிழந்த தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.7500 நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 14-5-2020 அன்று திண்டுக்கல் மாவட்ட சிஐடியு அலுவலகம் முன்பு கே.ஆர்.கணேசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 25 பேர் கலந்து கொண்டனர் 11 பேர் கைது செய்யப்பட்டனர். மேட்டுப்பட்டியில் கே. பிரபாகரன் தலைமையில் 40 பேர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டமும் , பஸ்நிலையம் அருகில் ஆர்.பால்ராஜ் தலைமையில் 40 பேரும் அதில் 30 பேர் கைது செய்யப்பட்டனர். மின்வாரிய அலுவலகம் முன்பு உமாபதி தலைமையில் 15 பேரும் , பழனியில் சோ.மோகனா தலைமையில் 30 பேரும் , ஒட்டன்சத்திரத்தில் முருகேசன் தலைமையில் 15 பேரும் , குஜிலியம்பாறையில் பாலசுப்பிரமணி தலைமையில் 27 பேரும் , ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!