பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் வாழும் மக்களுக்கு ரேஷன் பொருட்கள் மற்றும் முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டது!
ஆத்தூர் தாலுகா சித்தையன்கோட்டை நரசிங்கபுரம் கிராமத்தில் கடந்த வாரம் பெண் ஒருவருக்கு கொரொனா நோய்தொற்று உள்ளதாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பேரில் அந்த பகுதி முழுவதும் வழிகள் அடைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதனால் அப்பகுதி வாழ் மக்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு கொரொனா நிதியாக அறிவிக்கப்பட்ட உணவு பொருட்களை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டது. அந்த மக்களுக்கு பொருட்களை கொண்டு சேர்க்கும் பொருட்டு ஆத்தூர் வட்டாச்சியர் அரவிந்த் அவர்கள் அறிவுறுத்தலின்படி DD36 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் தலைவர் அக்பர் அலி நியாயவிலை கடை எண் 2-ல் விற்பனையாளராக பனிபுரியும் வனிதா என்பவர் மூலமாக தூய்மை பனியாளர்கள் உதவியுடனும் மற்றும் காவலர்கள் பாதுகாப்புடனும் அப்பதியில் வாழும் சுமார் 125 குடும்ப அட்டைதாரர்களுக்கு சேரவேண்டிய பொருட்களை தனிதனி பைகளில் இடப்பட்டு முதியோர் உதவித்தொகை பெறும் முதியோர்களுக்கும் சமூக இடைவெளியை கடைபிடித்து விடுவீடாக சென்று வழங்கினர்.


You must be logged in to post a comment.