கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தனிமைப்படுத்தப்பட்ட கோடாங்கி நாயக்கன் பட்டியில் தடுப்புகளை அகற்றி கொரோனா தொற்று இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டது.!

கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தனிமைப்படுத்தப்பட்ட கோடாங்கி நாயக்கன் பட்டியில் தடுப்புகளை அகற்றி கொரோனா தொற்று இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டது.!

நிலக்கோட்டை அருகே கோடாங்கிநாயக்கன்பட்டி கிராமத்தில் இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால் கிராமத்தை முழுவதுமாக போலீஸார் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து கிராமத்திற்கு செல்லும் வழிகளை அடைத்தனர். கடந்த நாற்பது நாளாக அடைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. தொற்றால் பாதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய காரணத்தினாலும் மேலும் இந்த பகுதிகளில் யாருக்கும் தொற்று இல்லாத காரணத்தினாலும் கோடாங்கி நாயக்கன் பட்டியில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை, மாவட்ட ஆட்சியர் மற்றும் நிலக்கோட்டை வட்டாட்சியர் உத்தரவுப்படி, நிலக்கோட்டை காவல்துறை ஆய்வாளர் சங்கரேஸ்வரன் தலைமையில் தடுப்புகளை அகற்றினர். அப்போது மக்களிடையே பேசிய காவல் ஆய்வாளர் இவ்வளவு நாட்களாக இந்தப் பகுதி பொதுமக்கள் ஒத்துழைப்பு தந்ததற்கு மிகுந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார், மேலும் இது சம்பந்தமாக நம்மிடம் பேசிய கோடாங்கி நாயக்கன் பட்டியைச்சேர்ந்த சமூக ஆர்வலரும் தமுமுகவின் மாவட்ட துணைச் செயலாளருமான “அபூபக்கர்” கூறியதாவது, கடந்த 40 நாட்களுக்கும் மேலாக அடைக்கப்பட்டிருந்த இந்தப் பகுதியில் தொற்று இல்லாத பகுதியாக அறிவித்து தடுப்புகளை அகற்றி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.எங்கள் ஊர் மக்களுக்கு தேவையான அனைத்தையும் ஏற்பாடுகள் செய்து கொடுத்த சகோதரர்கள், எங்களிடம் அனுசரணையுடன் நடந்து கொண்ட காவல்துறை,எங்களை நல்ல முறையில் கண்காணித்துக்கொண்ட சுகாதாரத் துறை, எங்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கிய வருவாய்த்துறை, எங்கள் ஊரில் மருந்துகள் தெளித்து சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்து கொண்ட சுகாதார பணியாளர்கள். என அனைத்து தரப்பினருக்கும், நான் சார்ந்த கட்சியின் சார்பாகவும், எங்கள் ஊர் பொதுமக்கள் சார்பாகவும், நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!