ஆத்தூர் தாலுகா சித்தைகோட்டையில் மதுக்கடைகள் திறப்பதற்கு திமுவினர் எதிர்ப்பு கோஷம்!
தமிழகத்தில் 07/05/2020 இன்று முதல் தகுந்த பாதுகாப்புடன் மதுபானக்கடைகள் திறக்கப்படுவதாக அரசு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அனைத்து பகுதிகளிலும் மதுபானக் கடைகள் இன்று திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. தமிழக அரசின் உத்தரவை கண்டிக்கும் விதமாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள அறிக்கையில் தற்போது கொரொனா நோய்தொற்று பரவிவரும் சூழலில் 144 தடையுத்தரவு அமுலில் உள்ளது. இச்சூழலில் மதுபானக்கடைகளை திறப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அதனை கண்டிக்கும் விதமாக அந்தந்த மாவட்ட தலைமை மற்றும் கிராமப்புறங்களில் இருக்கும் திமுக தொண்டர்கள் எதிர்ப்பை பதிவு செய்யவேண்டும் என அறிவிப்பு வெளியிட்டு இருந்ததின் பேரில் திண்டுக்கல் மாவட்டம் சித்தைகோட்டை பகுதியில் திமுக மாவட்ட கலையிலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் ரபீக் மைதீன் தலைமையில் திமுக வினர் கருப்பு சட்டை அணிந்து மதுபானகடை திறப்பிற்கு எதிப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.
திண்டுக்கல், பக்ருதீன்


You must be logged in to post a comment.