திண்டுக்கல் மாவட்டத்தில் காலை 9மணி முதல் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி:- மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

திண்டுக்கல் மாவட்டத்தில் காலை 9மணி முதல் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி:- மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

திண்டுக்கல் வர்த்தக சங்க நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி அத்தியாவசிய கடைகள் கட்டுமான பணிகளுக்கான கடைகள் ஹார்டுவேர், பெயிண்ட் கடைகள், சிமெண்ட் கடைகள் , விவசாயத்திற்கு தேவையான பைப், மோட்டார் கடைகள் மட்டும் திண்டுக்கல் மாவட்டத்தில் திறக்கப்படும். மீதி உள்ள அனைத்து கடைகளும் மூடியே இருக்கபடும். திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த கடைகள் மட்டும் காலை 9 மணியிலிருந்து 2 மணி வரைதான் கடை திறக்க அனுமதி என மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி கூறியுள்ளார், இதனிடையே இன்று திண்டுக்கல் மாவட்டம் பல பகுதிகளிலும் சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்டு பொதுமக்கள் கடைவீதிகளில் சுற்றித் திரிந்த காட்சி 144 தடை உத்தரவு முடிந்து விட்டதா என்று சந்தேகத்தை ஏற்படுத்தியது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!