சின்னாளபட்டி அருகே பெருமாள்கோவில்பட்டியில் காவல்துறை முன்னிலையில் இரு பிரிவினர் மோதிக்கொள்ள காரணமாக இருந்த, கொட்டகையை, வட்டாச்சியர் தலைமையில் திங்கள்கிழமை அகற்றினர்.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகே, பெருமாள்கோவில்பட்டி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பல்வேறு சமூகத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஊரில் பொது இடம் யாருக்கு சொந்தம் என உரிமை கொண்டாடுவதில் கடந்த 20-ஆண்டுகளுக்கு மேலாக இரு பிரிவினர்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், திங்கள்கிழமை காளியம்மன் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அளவைக் (பொது) கற்களை ஒரு பிரிவினர் (கிறிஸ்தவ தரப்பினர் ) அங்கு ஊன்றி இருந்த கற்களை பிடுங்கி எறிந்ததாக கூறப்படுகிறது.
இதனை மற்றொரு பிரிவினர் (இந்து அமைப்பினர்) தடுத்தபோது, காவல்துறையினர் முன்னிலையில், இரு பிரிவினர்கள் இடையே உருட்டு கட்டை மற்றும் கற்களை வீசி தாக்கி கொண்ட சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் இரு தரப்பைச் சேர்ந்த முத்துராஜ், கணேசன், மணி மற்றும் தினேஷ் உட்பட நான்கு பேர் படுகாயம் அடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இரு தரப்பினர் மோதிக்கொண்ட சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தினார்.
இந்நிலையில், ஆத்தூர் வட்டாட்சியர் முத்துமுருகன் தலைமையிலான வருவாய்த்துறையினர், பிரச்சனைக்குரிய இடத்தை ஆய்வு செய்து, பொது இடத்தில் அமைக்கப்பட்டு இருந்த ஹாஸ்பெட்டாஸ் செட்டை அகற்றி, ஒரு பிரிவினரால் பிடுங்கப்பட்ட அளவை கல்லை மீண்டும் ஊன்றினர். தொடர்ந்து இக்கிராமத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
You must be logged in to post a comment.