வத்தலக்குண்டு அருகே திமுக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் இடையே சின்னம் வரைவதில் போட்டா போட்டி! ஒரே சுவரில் இரண்டு சின்னங்களால் பரபரப்பு..

வத்தலக்குண்டு அருகே திமுக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் இடையே சின்னம் வரைவதில் போட்டா போட்டி! ஒரே சுவரில் இரண்டு சின்னங்களால் பரபரப்பு..

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே விராலிப்பட்டியில் திமுக மற்றும் பாஜகவினர் இடையே சின்னம் வரைவதில் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது.

இதனால் விராலிப்பட்டியில் திமுகவினர் தங்களது கூட்டணி கட்சியான சிபிஎம் கம்னியூஸ்ட் கட்சியின் சின்னமான அரிவாள் சுத்தியல் சின்னம் வரைந்து வருகின்றனர்.

பாஜகவினர் தங்கள் கூட்டணி கட்சி சின்னமான மாம்பழம் சின்னம் வரைந்து வருகின்றனர். இதில் இரண்டு கட்சியினரும் விராலிபட்டி, பண்ணைப்பட்டி, பகுதியில் சின்னம் வரைய போட்டா போட்டி போட்டு வருகின்றனர். பாஜக மற்றும் திமுகவினர் ஒரே சுவரில் இரண்டு பேரும் சின்னம் வரைந்து வருகிற சம்பவம் எதில் போய் முடியுமோ என்கிற பதட்டமும் பரபரப்பும் இப்பகுதி முழுவதும் நிலவி வருகிறது..

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!