தாண்டிக்குடியை சேர்ந்த சிறுவனின் தற்கொலைக்கு நீதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு..
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா, பூலத்தூர் பகுதியை சேர்ந்த அழகர்சாமி மகன் ராஜபாண்டி(16). அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பில் 500க்கு 440 மதிப்பெண் பெற்று பள்ளியிலேயே முதல் மாணவராக வந்தார்.
இந்நிலையில் கடந்த 11.9.2024 அன்று பள்ளியில் மதிப்பெண் சான்றிதழ் வாங்குவதற்காக வந்த மாணவன் ராஜபாண்டியை பொறுப்பு தலைமை ஆசிரியர் சௌந்தரபாண்டியன், அசிங்கமாக பேசி அவமானப்படுத்தி அனுப்பியதாகவும், இதனால் தான் தற்கொலை செய்து கொண்டான். எனவே மாணவனின் தற்கொலைக்கு நீதி கேட்டு அப்பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் பேரவை மற்றும் தேசிய செட்டியார்கள் பேரவை சார்பாக தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்தனர்.
You must be logged in to post a comment.