திண்டுக்கல்லில் தீவிரவாதிகளுடன் பண பரிமாற்றம் எனக் கூறி டிஜிட்டல் கைது கும்பலிடம் ரூ.21 லட்சத்தை இழந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.

திண்டுக்கல்லில் தீவிரவாதிகளுடன் பண பரிமாற்றம் எனக் கூறி டிஜிட்டல் கைது கும்பலிடம் ரூ.21 லட்சத்தை இழந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.

திண்டுக்கல், வடமதுரை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் குணசேகரன்(69) இவரிடம் மும்பை போலீசார் போல் பேசி தீவிரவாதிகளுடன் பணப்பரிவர்த்தனை உள்ளது என மிரட்டி வெளியே சொன்னால் குடும்பத்தோடு கைது செய்து விடுவோம் என்று பயத்தை ஏற்படுத்தி டிஜிட்டல் கைது செய்திருப்பதாக கூறியதைத் தொடர்ந்து குணசேகரன் பயத்தில் 2 தவணைகளாக டிஜிட்டல் கைது கும்பலிடம் ரூ.21 லட்சத்தை இழந்தார்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த குணசேகரன் திண்டுக்கல் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து சைபர் கிரைம் ADSP. தெய்வம் மேற்பார்வையில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் விக்டோரியா லூர்து மேரி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து டிஜிட்டல் கைது கும்பல் பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!