வேலூர் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை போலீசார் அதிரடி சோதனை செய்வார்கள் வேலூர் சரக காவல் டிஐஜி வனிதா பேட்டி அளித்துள்ளார்.
வேலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று 31-12-18 செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. வேலூர் சரக டிஐஜி வனிதா மற்றும் எஸ்.பி.பர்வேஷ் குமார் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாலது:- வேலூர் மாவட்டத்தில் 2018-ல் மொத்தம் 31 ஆயிரத்து 100 வழக்குகள் Uதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 582 சொத்து வழக்குகள் பதிவு செய்யப் Uட்டு அவற்றில் 530 வழக்கு கண்டறிப்பட்டு 81 சதவீத வழக்குகள் மீட்கப்பட்டுள்ளனர்.
2-ஆதாய கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அவை கண்டுபிடிக்கப்பட்டன.
7-கூட்டு கொள்ளை மற்றும் வழிப்பறி கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 50 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பு பொருள்களில் சிறப்பு புலனாய்வு பலனாக 45 லட்சத்து 75 ஆயிரம் பொருட்கள் மீட்கப்பட்டன.
மேலும் டிஐஜி வனிதா கூறும் போது வேலூர் மாவட்ட்த்தில் ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை போலீசள் அதிரடி சோதனை செய்வார்கள். விபத்தில்லா புத்தாண்டு கொண்டாடுவது தான் நாம் அனைவருக்கும் நல்லது. அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறினார்.
வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










