டிட்வா புயல் எதிரொலி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..

இலங்கையில் இருந்து தமிழகம் நோக்கி நகர்ந்து வரும் டிட்வா புயல், மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் கரையை நோக்கி வருகிறது. சென்னைக்கு தெற்கே 430 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் உள்ளது. நவ.30-ந்தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரையை வந்தடையும்.டிட்வா புயல் நெருங்கி வரும் நிலையில் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இரவு முதலே மழை பெய்து வருகிறது.இதன்காரணமாக பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல், விழுப்புரம், தஞ்சாவூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 வட்டங்களுக்கு மட்டும் ஏற்கனவே பள்ளிகளுக்கு விடுமுறை அறிக்கப்பட்ட நிலையில் தற்போது மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

1 கடலூர்
2 கள்ளக்குறிச்சி
3 திருவாரூர்
4 நாகை
5 மயிலாடுதுறை
6 பெரம்பலூர்
7 புதுக்கோட்டை
8 புதுவை
9 காரைக்கால்

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

1தஞ்சை
2 விழுப்புரம்
3 திருச்சி
4 அரியலூர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!