டிட்வா புயல் எதிரொலியால் நாளை பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.இந்நிலையில், திருச்சி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ள நிலையில் அவசர உதவி எண்கள் அறிவித்துள்ளனர்.அவசர தேவைகளுக்கு பொதுமக்கள் 1077 மற்றும் 0431 2418995 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.நாகை மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் அதிகனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அவசர கால உதவி எண்களை அறிவித்துள்ளது.அவசர கால கட்டுப்பாட்டு எண் 043651077, வாட்ஸ் அப் எண் 8110005558, கட்டணமில்லா எண் 18002334233 என்ற எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் அதி கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அவசர கால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.அவசர கால கட்டுப்பாட்டு எண் 1077 மற்றும் 04364-222588 ஆகிய உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


You must be logged in to post a comment.