தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வெள்ளிச்சந்தை 4 ரோடு பகுதியில் கரோனா வைரஸ் நிவாரண நிதியாக மத்திய மாநில அரசுகள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஐந்தாயிரம் வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் விவசாயத்தை பாதுகாக்க தென்பெண்ணை ஆற்று நீரை தூள் செட்டி ஏரி , மகேந்திரமங்கலம், மல்லுபட்டி தும்பலஹள்ளி அணை உள்ளிட்ட ஏரிகளிகளுக்கு தண்ணீரை திருப்பிவிடு வெளிச்சந்தையில் 4 ரோடு அருகில் பொதுக்கழிப்பிடம், நிழல்கூடம், நலவாரியத்தில் பதிவு செய்த கட்டுமான தொழிலாளர்களுக்கு உடனடியாக நிவாரணமாக 5 ஆயிரம் இலவச ரேஷன் பொருள் வழங்க வேண்டும் மற்றும் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது நடுத்தர கூலித்தொழிலாளிகள் ஏழை எளியோருக்கு மத்திய மாநில அரசுகள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் என கலந்துகொண்டு கோஷமிட்டனர் இந்நிகழ்ச்சியில் தலைமை ராஜா நக்கீரன் சந்திரசேகரன் ராமச்சந்திரன் மாரிமுத்து கலாவதி முனுசாமி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

You must be logged in to post a comment.