தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நகரில் பஸ் நிலையத்திலிருந்து பயணியர் மாளிகை வரையும், ஓசூர் சாலையில் விநாயகர் கோயில் வரையும் கடந்த ஆண்டு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் விபத்துகளை தவிர்க்கவும் தடுப்புச்சுவர்(சென்டர் மீடியன்) பல லட்சம் ரூபாய் செலவு செய்து தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது
இது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
மேலும் நேற்று 8 ஜுன் இரவு ஓசூர் பகுதியில் இருந்து தர்மபுரி நோக்கி சென்ற கனரக லாரி சாலை நடுவே தடுப்பு சுவர் இருப்பது தெரியாமல் தடுப்புச்சுவர் மீது லாரி மோதியதில் தடுப்புச்சுவர் தூள்தூளாக விழுந்தது மேலும் மூன்று தடுப்பு சுவர்கள் 10அடி தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டது.
இரவு நேரம் என்பதால் மக்கள் நடமாட்டம் இன்றி இருந்ததாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிப்பதாவது,
பாலக்கோடு நகரில் தடுப்பு சுவர் அமைத்து அதிலிருந்து அதிக விபத்துக்கள் தடுக்கப்பட்டது இது பொதுமக்களிடையே வரவேற்பையும் பெற்றது.மேலும் தடுப்புச் சுவர் பகுதிகளில் எச்சரிக்கை பலகை தகடு பொருத்துவதாலும், போதியளவு வெளிச்சம் இல்லாததாலும் அடிக்கடி இதுபோன்ற விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
தேர்தலின் போது பஸ்நிலையம் முன்பு உள்ள தடுப்ப சுவர் நெடுஞ்சாலை துறைனர் அகற்றிய 10க்கும் மேற்பட்ட தடுப்பு சுவர்கள் இதுவரை பயன்படுத்தாமல் உள்ளது.
அந்த தடுப்பு சுவர்களை வட்டாட்சியர் அலுவலகம், அரசு ஆண்கள் பள்ளி முன்பு பயன்படுத்தினால் விபத்துகளை தவிர்கவும் மாணவர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தும் என்றும் தடுப்பு சுவர்கள் தரமற்ற முறையில் உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தரமான சுவர்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சிங்காரவேலு


You must be logged in to post a comment.