பாலக்கோடு பேளாரஹள்ளி ஊராட்சியில் கொரோனா பதிக்கப்பட்ட பகுதியில் குட்டை போல் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு: நோய் பரவும் அபாயம், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை..

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட பேளாரஹள்ளி ஊராட்சி பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி,
அல்ராஜிகவுண்டர் தெரு, தொட்டம்பட்டி பிரிவுசாலை, புதூர்மாரியம்மன் கோவில் தெரு, புறவழிச்சாலை நான்குரோடு வரை  போதிய சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் ஆங்காங்கே குட்டை போல் பலமாதங்களாக தேங்கி கிடக்கிறது.
பாலக்கோடு புறவழிச்சாலை பகுதிகளில்  அதிக வணிக நிறுவனங்கள்  தெருக்கள் என அதிக அளவில் உள்ளது இப்பகுதிகளில் போதுமான சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் வணிக நிறுவனங்கள் மற்றும் தெருக்களில் இருந்து வெளியேறும் கழிவுகள் அப்பகுதிகளில் குட்டை போல் தேங்கி கிடைக்கிறது.
அரசு மகளிர் பள்ளி முதல் புறவழிச்சாலை 4ரோடு வரை நூற்றுக்கும் மேற்பட்ட வணிக கடைகள் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் சரியான கழிவு நீர் கால்வாய் இல்லாமல் இருப்பதால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் குட்டை போல் தேங்கியும்,  மழை காலங்களில் தெருவில் வரும் மழை நீர் மற்றும் வீடுகளில் இருந்து வரும் மழைநீரும் மற்றும் கழிவு நீர் இணைந்து பெரிய குட்டை போல் தேங்குவதால் சில நாட்களிலே துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி கொசு உற்பத்தியாகி பொதுமக்களுக்கு காய்ச்சல், தலைவலி, வாந்தி, பேதி, மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பெரும் சிரமத்தை அடைந்து வருகின்றனர்.
கழிவு நீர் பாதிப்பு குறித்து பலமுறை ஊராட்சி தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றும் அதிகாரிகள் அலச்சியமாக   பதில் அளிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு கழிவு நீரை அகற்றி கொசு தொல்லையில் இருந்து பொதுமக்கள் காப்பாற்ற கழிவுநீர் கால்வாய் அமைக்க  வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சிங்காரவேலு

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!