பாலக்கோடு தக்காளி மார்க்கட் பின்புறம் தனி நபர் ஆக்கிரமிப்பு அகற்றம்!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் 2019-20ம் ஆண்டு மூலதனமான்ய நிதி திட்டத்தின் கீழ் புதிய குடிநீர் விநியோக குழாய் பதிக்கும் பணி மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி தீர்த்தகரி 7 வது வார்டில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் தொடங்க உள்ளதால் அந்த இடத்தில் பெரியசாமி என்பவர்  கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அரசுக்கு சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி குடி இருந்த நிலையில், பலமுறை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட வீட்டை காலி செய்ய எச்சரிக்கை செய்தும் வீட்டை காலி செய்ய மறுத்ததால் பேரூராட்சி நிர்வாகம் சார்பில்   பாலக்கோடு போலீசார் பாதுகாப்புடன் பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி மேற்பார்வையில்  பேரூராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பை அகற்றினர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!