பாலக்கோடு அருகே ரெட்டியூர் கிராமத்தில் உள்ள பழுதடைந்த புது ஏரியை குடிமாரத்து திட்டத்தின் மூலம் தூர்வார விவசாயிகள் கோரிக்கை!

தருமபுரி மாவட்ட  பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட எர்ரணஹள்ளி ஊராட்சி ரெட்டியூர் கிராமத்தில் உள்ள புது ஏரி கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. புதுஏரி மூலம் சுற்றுவட்டாரத்தில் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி அடைந்து வருகிறது. பல வருடங்களாக ஏரிக்கரை பழுது அடைந்தும், ஏரியில் ஆங்காங்கே விரிசல் ஓட்டை  விழுந்து உள்ளதால் கோடைமழை மற்றும் பருவமழை காலங்களில் போதுமான மழை நீரை சேமிக்க முடியாமல் மழைதண்ணீர் வழிந்து ஓடி விடுகின்றது. இதனால் இப்பகுதி கடும் வறட்சி நிலவி வருகின்றது.   இப்பகுதியில்1000 அடிக்கு கீழ் நிலத்தடி நீர் சென்றதால் விவசாயம் முற்றிலும் பொய்து போனதால் விவசாயிகள் வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலத்திற்கு கூலி வேலைக்கு செல்லும் அவலநிலை உள்ளனர். மேலும் பல ஆண்டுகளாக ஏரியை தூர்வாரததாலும், ஏரி பகுதியில் அதிக அளவில் ஆக்கிரமிப்பு செய்து விவசாய நிலங்களாக மாற்றியுள்ளனர். மேலும் வரத்து கால்வாய்களை தூர்ந்து உள்ளதால் மழைநீரை சேமிக்க முடியத நிலையில் உள்ளது. தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் பெய்யும் மழை ஏரி பழுதால் சிலநாட்களிலையே வறண்டு விடுகின்றன.

ஏரி பழுது மற்றும் ஆக்கிரமிப்பு குறித்து பலமுறை வருவாய் துறைக்கும் , ஊராட்சி நிர்வாகத்திற்கும் புகார் மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் குடிமாரத்து பணி மூலம்  ஏரி ஆக்கிரமிப்பு, ஏரி பழுதை சரி செய்து, தூர்வாரி விவசாயிகளுக்கு பயன்பெரும் வகையில்  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!