பாலக்கோட்டில் தன்னார்வலர்கள் கையில் போலீசார் லத்தி! வாகன தணிக்கையில் அத்துமீறும் தன்னார்வலர்கள்; மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் வாகன தணிக்கையின் போது தன்னார்வலர்கள் கையில் போலீசார் லத்தியை கொடுத்து அத்து மீறி செயல்படுவதாக பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம் முழுவதும் போலீசார் , முன்னாள் ராணுவத்தினர், மற்றும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு ஊரடங்கு பாதுகாப்பு பணியில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் பாலக்கோடு தன்னார்வலர்கள் கைகளில் போலீசார் பயன்படுத்தும் லத்தியை பயன்படுத்துவது மட்டுமின்றி தங்கள் போலீஸ் என நினைத்துக்கொண்டு டூவீலரில் செல்லும் மக்களை விரட்டி மறித்து சாவிகளை பறித்து அத்துமீறுவதால்  பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில் தன்னார்வலர்கள் என்ற பெயரில் சிலர் நீண்ட தாடியுடன் போலீசாருடன் சாலை சுற்றி திரிந்து அவ்வழியாக செல்பவர்களின் வாகனங்களை மடக்கிப் பிடித்து விசாரணை என்ற பெயரில் வரம்பு மீறி செயல்படுகின்றனர் இதனால் அவர்களை கண்டாலே வாகன ஓட்டிகள் பீதி அடைந்து வருகின்றனர் மேலும் போலீசாருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி மக்கள் போலீசாரின் மீது மதிப்பு வைத்துள்ள நிலையில் தன்னார்வலர்கள் காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தி வருகின்றனர். இதை மாவட்ட எஸ்பி கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!